21. அருள்மிகு அருட்சோமநாதர் கோயில்
இறைவன் அருட்சோமநாதர்
இறைவி வேயுறு தோளியம்மை
தீர்த்தம் செங்கழுநீரோடை
தல விருட்சம் மகிழமரம்
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருநீடூர், தமிழ்நாடு
வழிகாட்டி மயிலாடுதுறையில் இருந்து கொருக்கை செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநீடூர் இரயில் நிலையம் மாயவரத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

Needur Gopuramபிரளயக் காலத்திலும் அழியாது நீடித்திருந்ததால் 'நீடூர்' என்று அழைக்கப்பட்டது. முதல் யுகத்தில் இந்திரனும், இரண்டாவது யுகத்தில் சூரிய, சந்திரனும், மூன்றாவது யுகத்தில் காளியும், நான்காவது யுகத்தில் நண்டும் இத்தலத்து இறைவனை பூசித்ததாகத் தலவரலாறு கூறுகிறது.

Needur AmmanNeedur Moolavarஇத்தலத்து இறைவனை சந்திரன் வழிபட்டதால் மூலவர் 'அருட்சோமநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 'கானநிர்த்தன சங்கரர்' என்றும் போற்றப்படுகின்றார். அம்பிகை 'வேயுறு தோளியம்மை' என்று வணங்கப்படுகிறார். சூரியனுக்கு அபயமளித்ததால் 'ஆதித்யா பயப்ரதாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறார்.

முனையடுவார் நாயனார் தொண்டு செய்து முக்தியடைந்த தலம்.

ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மூலவர் மீது சூரிய பூஜை நிகழ்கின்றது.

சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com